'மரியாதையா கொடுத்திரு!'-புது இயக்குநரை மிரட்டும் 'அருவா' ஹரி

தனுஷ் நடிக்கும் ஹரியின் புதிய படத்துக்கு வேங்கை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதையும், இதே பெயரை இன்னொரு இயக்குநரும் தனது படத்துக்கு சூட்டியிருப்பதையும் சில தினங்களுக்கு முன்பே கூறி்யிருந்தோம்.
இந்தப் படத்துக்கு ஏற்கெனவே அருவா என்ற பெயரை சூட்டியிருந்தார் ஹரி. ஆனால் அந்தப் பெயர் நாயகன் தனுஷுக்குப் பிடிக்கவில்லையாம். எனவே வேங்கையை எப்பாடுபட்டாவது வாங்கியே தீருவது என்ற முனைப்பில், வேங்கை தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கும் பாலா என்ற புதிய இயக்குநரிடம் பேசியுள்ளார் ஹரி.
ஆனால் அவரோ தலைப்பைத் தரமுடியாது என மகா உறுதியாக இருக்கிறாராம்.
ஹரியோ, வேங்கைதான் வேண்டும் என்ற வேகத்தில், புதிய இயக்குநரை மிரட்ட ஆரம்பித்துள்ளாராம். மரியாதையா தலைப்பைக் குடுத்துரு... என்னைப் பத்தி உனக்குத் தெரியாது" என்று தன் படத்தின் அருவா ஹீரோக்கள் கணக்காக மிரட்ட ஆரம்பித்துள்ளாராம்.
இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடும் முடிவில் இருக்கிறாராம் புதிய இயக்குநர்.


Click it and Unblock the Notifications











