சீமான் மீதான 'குண்டாஸ்' ரத்து!

By Staff

Seeman
சென்னை: இயக்குனர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நெல்லையில் நடந்த கூட்டத்திலும் அவர் தேச ஒற்றுமைக்கு விரோதமாகப் பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நெல்லை கலெக்டரின் பரிந்துரையின்பேரில், அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானார்.

இதை எதிர்த்து சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரமும் இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

மேலும் தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் இதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடந்தது.

இந் நிலையில் அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தர்மாராவ், நீதிபதி செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இதை விசாரித்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது.

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தவறு என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். ஆனால், புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலையாவதில் சிக்கல் உள்ளது.

இதில் ஜாமீன் கிடைத்தால் சீமான் சில நாட்களில் விடுவிக்கப்படலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X