கரூரில் அசல், குட்டி, கிளுகிளு சிடிக்கள் பறிமுதல்!

கரூரில் உள்ள வீடியோ கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக ஆபாசப்படங்கள் மற்றும் புதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
இதனையடுத்து, கரூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள வீடியா கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அசல், குட்டி, நாணயம் போன்ற புதுப்பட சுமார் 3000 சிடிக்கள் சிக்கின.
வீடியோ கடை ஊழியர்கள் கரூரை சேர்ந்த பாபு (42), ராஜ்குமார் (27), முருகன்(34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments


Click it and Unblock the Notifications