ராஜபக்சேவைச் சந்தித்த பிரபல இசையமைப்பாளர்!

ஆனால் இங்கிருக்கும் ஒரு பிரபல இசையமைப்பாளரோ இன்னொரு கருணாவாக மாறி, ராஜபக்சேயிடம் சினிமாக் கூட்டணியே வைக்கும் அளவுக்குப் போயிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவிலும் புலம் பெயர் தேசங்களிலும் சரி, இதுதான் இப்போது பரபர செய்தி.
விரைவில் இந்த இசையமைப்பாளர் தன் மகனை அழைத்துப் போய் ராஜபக்சேவைச் சந்திப்பார் என்றும், அப்போது ராஜபக்சேவுக்காக புதிய படத்தை மகன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
ராஜபக்சே தமிழ்ப் படம் எடுக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேட்கிறீர்களா... வேறென்ன.. இலங்கை தமிழர்கள் சந்தோஷமாக, அடுத்த தமிழ் சினிமா எப்போது வரும் என்ற ஆவலோடு நிம்மதியாக இலங்கையில் வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவும், போகுமிடமெல்லாம் முகத்திலறையும் தமிழினத்தின் எதிர்ப்பலையை சமாளிக்கவும்தான்!
Comments


Click it and Unblock the Notifications