Empuraan படத்தில் சர்ச்சையான காட்சி.. மொத்தம் 17 சீன்கள் நீக்கமா?.. மீண்டும் தீராத பஞ்சாயத்து

சென்னை: நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரைக்கு வந்தது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் ரிலீஸ் 3வது நாளே உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை தாண்டி இப்படத்தில் மிக மோசமான காட்சிகளை கத்தரிப்பு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வசூல் வேட்டை: நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எம்புரான். இப்படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லூசிஃபர் படத்தை போன்று எம்புரான் இல்லை என விமர்சிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக பல ரெக்கார்டுகளை படைத்து வருகிறது. மலையாள சினிமாவில் 3 நாளில் 150 கோடி வசூல் செய்துள்ள முதல் படம் எம்புரான் என தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகம் என்ற விமர்சனத்தை தாண்டி எம்புரான் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.

17 scenes removed from Mohanlal s film Empuraan

17 சீன்கள் நீக்கம்: திரையுலகில் பல படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்ச்சைகளால் படம் ரிலீஸ் ஆக தாமதாகின்றன. அதை போன்று பல படங்கள் ரிலீஸ் ஆன பின்பு அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளால் சர்ச்சைகள் நீடிக்கும். அதேபோன்று எம்புரான் படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்த பின்பு தான் படமே ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனாலும், இப்படத்தில் சில மோசமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்துக்களை மோசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், எம்புரான் படத்திலிருந்து 17 காட்சிகளை நீக்குவது அல்லத திருத்தம் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரீ ரிலீஸ்: எம்புரான் படத்தில் கர்ப்பிணி மற்றும் சிறுவர்களை பஜ்ரங்கி குரூப் மிக கொடூரமாக கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மிக கொடூரமான முறையில் இஸ்லாமிய கர்ப்பிணி பெண்களை வதைபடுத்துவது போன்ற காட்சிகள் பார்க்கவே ரணமாக இருக்கிறது என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. மேலும் பஜ்ரங்கி என்ற மதவாத குரூப் இஸ்லாமியர்களை துரத்தி கொலை செய்வதால் பாதிக்கப்படும் சிறுவன் தான் சயிஃப். பின்னாளில் பெரிய ஆளாக வளர்ந்து மதவாத கும்பலின் தலைவனை கொலை செய்வது போன்ற காட்சிகளும் இருக்கின்றன. இதனால், இப்படத்தில் இருக்கும் 17 காட்சிகளை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டிருக்கிறது. 17 காட்சிகளும் நீக்கிய பின்பு மீண்டும் ஏப்ரல் 2 முதல் எம்புரானின் புதிய வெர்ஷனை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

17 scenes removed from Mohanlal s film Empuraan

எம்புரான் எப்படி இருக்கிறது: மோகன்லால் நடிப்பு பிரமாதப்படுத்தியிருந்தாலும் கதையில் சுவாரஸ்யம் இல்லை என கூறப்படுகிறது. 17 காட்சிகளை நீக்கிய பின்பாவது படத்தில் சுவாரஸ்யம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். லூசிஃபர் படத்தில் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதும் அதில் லூசிஃபராக வரும் ஸ்டீபன் யார் எங்கிருந்து வந்தான் என்பதை தெரிந்துகொள்வது தான் இரண்டாம் பாகத்தின் நீள்ச்சி. ஆனால், 2ஆம் பாகத்தில் கேங்ஸ்டராக வந்தாலும் உண்மையில் குரேஷி ஆபிரகாம் என்பவர் என்ற பில்டப் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X