ஷாரூக் கானுக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை!

மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, ஷாரூக் நலமுடன இருப்பதாகவும், அவர் இன்னும் இரு தினங்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தோள்பட்டை வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார் ஷாரூக்கான். ஒருகட்டத்தில் வலி அதிகரிக்க, லண்டன் போய் சிகிச்சைப் பெற திட்டமிட்டார்.
ஆனால், மும்பையின் பிரபல மருத்துவர் சஞ்சய் தேசாய் ஆலோசனையின் பேரில் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற ஒப்புக் கொண்டார். ஆனால் தொடர்ந்து அவருக்கு ஷூட்டிங் இருந்ததால் அறுவைச் சிகிச்சைக்கான நாள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
ஒருவழியாக நேற்றுதான் அவருக்கு சிகிச்சை முடிந்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு முதுகுவலிக்காக லண்டனில் ஷாரூக் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.
Comments
தோள்பட்டை அறுவைச் சிகிச்சை பாலிவுட் ஷாரூக்கான் bollywood breach candy cinema mumbai shahrukh shoulder surgery


Click it and Unblock the Notifications