17 ஆண்டுகளை கடந்த தசாவதாரம்.. பாட்டி மேக்கப் வரை பக்கா.. இந்தியன் 2, தக் லைஃபில் ஏனோ மிஸ்ஸிங்?
சென்னை: தமிழ் சினிமா = கமல்ஹாசன் என எழுதும் அளவிற்கு தனது குழந்தை பருவத்தில் இருந்து இப்போது வரை கலக்கிக் கொண்டு இருப்பவர் கமல்ஹாசன். கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா என தன்னை எல்லா தளங்களிலும் நிறுவி வெற்றி கண்ட கமல்ஹாசனின் சினிமா மொழி வெகுஜன ரசிகர்களுக்கு புரியாமல் காலம் கடந்து கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு கமல்ஹாசனை தங்களின் சினிமா பல்கலைக் கழகமாக அறிவித்துக் கொண்ட ரசிகர்களே அவரது இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் குறித்து ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு உள்ளார்கள்.
இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியான தசாவதாரம் படம் வெளியாகி இன்றோடு அதாவது ஜூன் 13 ஆம் தேதியோடு 17 ஆண்டுகள் ஆகிறது. இவரது ரசிகர்கள் கடந்து பலரும் இந்த படம் குறித்து இணையத்தில் ஃபயர் விட்டுக் கொண்டு உள்ளார்கள். 17 ஆண்டுகளுக்கு முன்னர், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மொத்தம் 10 வேடங்களில் கமல்ஹாசன் கலக்கி இருப்பார். இந்த படத்திற்காக அப்போதே இவர் போட்டுக் கொண்ட மேக்-அப்கள் இன்றைக்கும் தமிழ் சினிமாவுக்கு பாடம் நடத்திக் கொண்டு உள்ளது. இந்த படம் குறித்து சிலாகித்து பேசுபவர்கள் பலரும் சொல்லும் விஷயம், செட்டில் கமல்ஹாசன் யார் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அவருக்கு மேக்-அப் இருந்தது.

எது முக்கியம்: விதவிதமான கெட்டப்கள் மட்டும் படத்திற்கு வெற்றியை ஈட்டித் தராது. மாறாக படத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றி உறுதியாகும். அப்படித்தான் தசாவதாரம் படத்தின் வெற்றி அமைந்தது. ஆனால் விதவிதமான கெட்டப்கள் போட்டு கமல்ஹாசனின் நேரமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணடிக்கப்பட்ட படமாக மாறிப்போனது இந்தியன் 2. இந்த தசவாதராம் படத்தில் எந்த அளவிற்கு மேக்-அப் செய்து கொண்டாரோ அதேபோலத்தான் இந்தியன் 2 படத்திலும் மேக்-அப் போட்டுக் கொண்டார். ஆனால் படம் அட்டர் ஃபிளாஃப். இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமே ஷங்கரின் சொதப்பல் திரைக்கதை.
சொதப்பல் திரைக்கதை: இந்தியன் 2 என மட்டும் இருந்த படத்தை இந்தியன் 3 எனவும் பிரித்து லைகா நிறுவனத்திற்கு பெரிய பொருட்ச் செலவு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தான் காட்டு மொக்கைப் படம் என்றால், இந்தியன் 2 படத்தை ஆஹா ஓஹோ என பாராட்ட வைத்துவிட்டது தக் லைஃப். 38 ஆண்டுகளுக்கு பின்னர் கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைகிறார்களே படம் பட்டாசாக இருக்கப் போகிறது என எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஷங்கர் தனது பங்கிற்கு ஒரு லாரி மண்ணை கொட்டினால், மணிரத்னம் தனது பங்கிற்கு 10 லாரி மண்ணைக் கொட்டி ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.

ஏமாற்றாதீர்கள்: தசாவதாரம், இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் என இந்த மூன்று படங்களுமே டெக்னிக்கலாக தரமான படங்கள். ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு கதை ஒட்ட வேண்டும், திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என்றாலும் போர் அடிக்காமலாவது இருக்க வேண்டும். இவை இல்லாத படம் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காக இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன? கமல் சார் உங்களை கொண்டாட காத்திருக்கிறோம் என சொல்லும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அடுத்தடுத்து இரண்டு பல்பு கொடுத்ததை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


Click it and Unblock the Notifications











