மச்சான்’-ல் வரும் ’மச்சான்... மச்சானில்..’ 18 நடிக, நடிகையர் ஆட்டம்
சென்னை: ''மச்சான்'' படத்தில் ஒரு பாடல் காட்சியில் 18 நடிகர், நடிகைகள் நடித்துள்ளனராம். அதாவது ஆடிப் பாடியுள்ளனராம்.
UFX பிலிம்ஸ் வழங்க ஆர்.கே. ஸ்டுடியோஸ் பாலமுருகன் தயாரிக்கும் படம்தான் 'மச்சான்'. பாலமுருகன் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம்.
இந்த படத்தில் கருணாஸ், விவேக், ஷெரில் பின்டோ, கோவை சரளா, மதுமிதா, வையாபுரி, மயில்சாமி, வெ.ஆ.மூர்த்தி, பாண்டு, ஆர்யன், டி.பி.கஜேந்திரன் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் மிக முக்கியமான வேடத்தில் இயக்குனர் ஷக்திசிதம்பரம் நடிக்கிறார்
'மச்சான்' படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறும்போது...

நாட்டுப்பிரச்சினை தான்....
இன்று நாடெங்கும் உள்ள பிரச்சனையை இதில் கையாண்டிருக்கிறேன். கல்யாணம் ஆன பிறகு நண்பர்களை வீட்டிற்குள் அனுமதிக்கலாமா, வேண்டாமா ? என்பதுதான். அதில் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும்

என் பார்முலா...
என் படத்தில் நட்பையும், காதலையும், அழகாக காமெடி கலந்து உருவாக்கியிருக்கிறேன். தியேட்டரில் விசில் பறக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம் இருக்கிறது. வழக்கமா நான் கையாளும் யுக்தியை இதில் பயன்படுத்தி இருக்கிறேன்.

விரைவில் திரையில்...
படத்தைப் பார்த்த UFX பிலிம்ஸ் உடனே மொத்தமாக வாங்கி விட்டது. படம் விரைவில் திரைக்கு வருகிறது என்றார்.

மச்சான்... மச்சான்...
இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கும் மச்சான் திரைபடத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘'மச்சான்,மச்சான்''என்ற பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது

18 பேர்...
அந்த பாடலில் ரா.பார்த்திபன்,எஸ்.ஜே.சூர்யா,பரத்,விதார்த்,விமல்,ஸ்ரீகாந்த்,விஜய்சேதுபதி,கிருஷ்ணா, சிவா,சாந்தனு,விஜய்அண்டனி,சத்யன்,கோவைசரளா,சூரி,திரு,தம்பி ராமய்யா,பவர் ஸ்டார் ஸ்ரீகாந்த் தேவா உட்பட அனைவரும் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











