மனித வெடிகுண்டாக மாறுவோம்!- ஜீவிதாவை மிரட்டிய சிரஞ்சீவி ஆதரவாளர்கள்

பிரஜா ராஜ்ஜியம் கட்சித்தலைவர் சிரஞ்சீவியின் ரத்த பரிசோதனை நிலையத்தில் முறைகேடுகள் நடப்பதாக, நடிகை ஜீவிதாவும், அவரது கணவரும் நடிகருமான ராஜசேகர் ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், "சிரஞ்சீவியை தொடர்ந்து தாக்கி பேசி வந்தால், மனித வெடி குண்டாக மாறி கொலை செய்வோம்'' என்று, எஸ்.எம்.எஸ். மூலமும், டெலிபோன் மூலமும் நடிகை ஜீவிதாவுக்கு மிரட்டல் வந்து உள்ளது.
இதுபற்றி, ஹைதராபாத்தில் உள்ள ஜுப்லி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார் நடிகை ஜீவிதா. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
actress jeevitha கொலை மிரட்டல் நடிகை ஜீவிதா பிரஜா ராஜ்யம் போலீசில் புகார் மனித வெடிகுண்டு complaint human bomb life threat


Click it and Unblock the Notifications