சேலம் அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்த நடிகை நளினி!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவலூர், எழிலரசி காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நடிகை நளினி பங்கேற்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் இதுவரை 128 படங்களில் நடித்துள்ளேன். முதன் முதலாக உயிருள்ளவரை உஷா என்ற படத்தில்தான் அறிமுகமானேன்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். சிவாஜியுடன் சாதனை, எழுதாத சட்டம், வம்ச விளக்கு, ராஜரிஷி உள்பட 5 படங்களில் நடித்தேன். ரஜினியுடன் ராணுவ வீரன் படத்தில் நடித்தோம்.
தற்போது 6 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. நிறைய டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறேன். விருதுகளும் பெற்றுள்ளேன்.
தமிழ் ரசிகர்கள் எனக்கு தொடர்ந்து நல்லாதரவு தந்து வருகின்றனர். எனது கணவர் ராமராஜன் அரசியலில் இருக்கிறார். ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. ஆன்மீகத்தைதான் விரும்புகிறேன்,"
Comments


Click it and Unblock the Notifications