சினிமா ஹீரோவானார் மத்திய அமைச்சர் அந்தோணியின் மகன்!

மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கேஅந்தோணி கேரளாவை சேர்ந்தவர். இவருடைய இளைய மகன் அஜித்பால் அந்தோணி. இவர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். சினிமாவில் தீவிர ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில், அஜித்பால், தனது சொந்த திரைக்கதையில், மலையாள சினிமா படம் ஒன்றில் முதன்-முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு 'ஓபராய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் திரைப்படம்.
இந்த தகவலை, செய்தியாளர்களிடம் அஜித்பால் தெரிவித்தார்.
"எனக்கு வெகுநாட்களாகவே, சினிமா மீது மிகவும் ஆசை. இதற்காக, சினிமா படிப்பு எதிலும் சேர்ந்து நான் படிக்கவில்லை.
இந்த திரைப்படம் முதலில் மலையாள மொழியில் தயாரிக்கப்படுகிறது. பின்னர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவருகிறது. கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த சினிமாவின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது..." என்றார்.
மலையாள சினிமா இயக்குநர் அஜி ஜான் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியான 'நல்லவன்' என்ற படத்தை இயக்கியவர் அஜி ஜான்.


Click it and Unblock the Notifications











