மருத்துவமனையில் ஏவிஎம் சரவணன்

ஏவிஎம் சரவணன் வீடு மைலாப்பூரில் உள்ளது. நேற்று காலை கடற்கரையில் நடைப் பயிற்சி முடித்துவிட்டு, வீடு திரும்பிய சரவணன் குளிப்பதற்கு பாத்ரூமுக்குள் சென்றார். அப்போது வழுக்கி விழுந்தார்.
சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்த போது சரவணன் நிலைகுலைந்து வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அவரால் எழுந்திருக்கவோ, உட்காரவோ கூட முடியவில்லை. உடனடியாக அவரை போரூர் ராமச்சந்திரா பல்கலைக் கழக மருத்துமனையில் அனுமதித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவரது இடுப்பெலும்பு முறிந்திருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இடும்புப் பகுதியில் ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்ற பின் சரவணன் வீடு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications