விசா மோசடி: தெலுங்கு நடிகைகளை விசாரிக்க தனிப்படை

அமெரிக்காவுக்கு செல்ல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக நடிகை புளோரா, புரோக்கர் வெங்கட் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் புளோராவுக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. வெங்கட் ரெட்டியை 4 நாள் காவலில் போலீஸார் எடுத்துள்ளனர்.
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்குத் திரையுலகினர் குறித்த சில முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
இதில் சில முக்கிய நடிகர், நடிகைகள் குறித்த பல முக்கிய தகவல்களை ரெட்டி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் நடிகைகள்தான் அதிகம் என்றும் தெரிகிறது.
இதையடுத்து அந்த நடிகைகள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்த சென்னையிலிருந்து தனிப்படை போலீஸார் இன்று மாலை ஹைதராபாத் செல்கின்றனர்.
இந்த விசாரணையில் அமெரிக்க விசா மோசடி தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











