விவாகரத்து டைவர்ஸ் மனு- கணவர் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

நடிகை விந்தியாவுக்கும், நடிகை பானுப்பிரியாவின் தம்பியும், படஅதிபருமான கோபாலகிருஷ்ணன் என்கிற கோபிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது. திருமணமான சில நாட்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
விந்தியாவிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் கோபி மனுதாக்கல் செய்தார். ஆனால் விந்தியா சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ராமலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். இருதரப்பினரும் அடுத்த மாதம் (அக்டோபர்) 19-ந் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications