திருவண்ணாமலையில் தனுஷ் ரசிகர்கள் கோஷ்டி மோதல்-3 பேருக்கு மண்டை உடைந்தது

By Chakra

திருவண்ணாமலையில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து அடித்துக் கொண்டனர். இதில் 3 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆத்திரத்தில் அவர்களது ஆதரவாளர்கள் தனுஷ் பட பேனர்களைக் கிழித்து தங்களது கோபத்தைத் தீர்த்துக் கொண்டனர்.

தியேட்டர்களில் புதுப் படம் வெளியாகும்போது ரசிகர்களுக்குள் கலாட்டாக்கள், அடிதடி நடப்பது சகஜமாகி வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலையில் தனுஷ் ரசிகர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு மண்டை உடைப்பு வரை போயுள்ளது.

எல்லாம் ஆடுகளம் படத்திற்காக நடந்த கூத்துதான். தனுஷ் நடித்துள்ள படம் ஆடுகளம். பொங்கலுக்கு வந்துள்ளது. திருவண்ணாமலையில் அன்பு என்ற தியேட்டரில் இப்படத்தை ஓட்டி வருகின்றனர்.

இதற்காக தியேட்டரில் வளைத்து வளைத்து பேனர்களை கட்டியிருந்தனர். அதில் சில மன்ற முக்கியஸ்தர்களின் பெயரைப் போடவில்லையாம். இதனால் அவர்களின் ஆதரவாளர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதுகுறித்து பெயரைப் போடாமல் பேனர் வைத்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தியேட்டருக்குள் வைத்து இந்த சண்டை மூண்டது. வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாற, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதில் 3 ரசிகர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்களைக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்களது ஆதரவாளர்கள் மீண்டும் தியேட்டருக்கு வந்து பேனர்களை எல்லாம் பிளேடால் கிழித்து ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டனர்.

விரைந்து வந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களைத் தேடினர். அதில் ஒரே ஒருவர் மட்டுமே சிக்கினார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவர் ஆவார். அவரை காவல் நிலையத்திற்குக் கொண்டு போய் வைத்து விசாரித்து வருகின்றனர் போலீஸார்.

படிக்க வேண்டிய வயசுல இப்படியாப்பா அடிச்சுக்குறது...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X