twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேர்தல் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யம் அளிக்கிறது-சரத்குமார்

    By Staff
    |

    Sarathkumar
    சென்னை: விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற விவகாரங்கள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்னும் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யம் அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் மீறி வெளிவந்துள்ளன. விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்னும் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யமே.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 4 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு ஓரளவு வாக்குகளைப் பெறமுடிந்தது. வெற்றி தோல்விகளை பற்றி சிந்திக்காமல், பணபலத்தை மட்டுமே நம்பாமல் இந்த தேர்தலில் நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

    இருப்பினும், மீண்டும் மீண்டும் பணபலம் எந்த அளவு உண்மையான ஜனநாயக உணர்வுகளை சிதைத்து வருகிறது என்பதை இந்த தேர்தலிலும் உணர முடிந்தது. இருப்பினும் இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, வெற்றி பெற்றவர்களுக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மத்தியில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளை மீண்டும் தொடராமல், செய்யத் தவறிய பணிகளை செய்து மக்கள் நல்வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்துவதை ஆட்சி பொறுப்பேற்றதும் முதற்கட்டமாக செய்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து எங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும், எதிர்கட்சியில் இருப்பவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் ஆணித்தரமான விவாதங்களில் பங்கேற்று மக்கள் நலச் சேவையில் அரசை வழி நடத்தி செல்ல வேண்டும்.

    வெற்றி பெறாதவர்கள் தோல்வியில் துவண்டு விடாமல், மக்கள் பிரச்சினைகளை ஆளும் கட்சிக்கு எடுத்துச் சொல்லி அவர்களது குறைகள் நீங்க அயராது பாடுபட வேண்டும். பதவியில் இருந்தால் மட்டுமே மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்பதில்லை.

    தோல்வி என்பது முடிவல்ல, வெற்றிக்கான ஆரம்பம் என்பதை கருத்தில் கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் முன்னிலும் வேகமாக மக்கள் சேவைப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை இப்போதே மேற்கொண்டு அயராது உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் சரத் குமார் தெரிவித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X