twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் ஆபாச போஸ்-வித்யா பாலன் மீது ஹைதராபாத்தில் வழக்கு

    By Sudha
    |

    ஹைதராபாத்: தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை வித்யா பாலன் மீது ஹைதராபாத்தில் ஒரு வக்கீல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சாய் கிருஷ்ணா ஆசாத் என்ற அந்த வக்கீல் நம்பள்ளி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், வித்யா பாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தொடர்பான போஸ்ட்ரகளும், விளம்பரங்களும் மிகவும் ஆபாசமாக உள்ளன. பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவை நகரெங்கும் பெரிய அளவில் ஒட்டப்பட்டுள்ளன. பெண்கள் சாலைகளில் செல்லவே வெட்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்களின் மனதைக் கெடுக்கும் வகையிலும், சமூகத்திற்கு தீங்கு ஏற்படும் வகையிலும் இந்த ஆபாச போஸ்டர்கள் விளங்குகின்றன. எனவே இப்படி ஆபாச போஸ் கொடுத்துள்ள வித்யா பாலனுக்கு எதிராகவும், மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

    இதை விசாரித்த கோர்ட், வித்யா பாலன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி தற்போது போலீஸார், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்லனர். அவர் மீது ஆபாசமாக நடிப்பது, பெண்களை அநாகரீகமாக சித்தரிப்பதைத் தடை செய்யும் சட்டப் பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வித்யா பாலனை விசாரிப்போம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Hyderabad Police have registered a FIR against actor Vidya Balan, following a complaint by an advocate, who alleged that she had posed for indecent photographs on the posters and promos of the film The Dirty Picture. The complainant, Sai Krishna Azad, a practicing advocate, had last month approached the Nampally court here and filed a petition, in which, he had alleged that the posters and promos of the film were "obscene" and were "causing inconvenience to women" in the Nallakunta area and other parts of Hyderabad. Following a court directive, a case was booked against Vidya Balan under Section 294 (Obscene acts and songs) and relevant sections under the Indecent Representation of Women (Prohibition) Act, 1986, Nallakunta Inspector of Police M Suman Kumar said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X