வேட்டைக்காரன்... தியேட்டரில் தீ!

விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் வெளியானது.
வேலூரை அடுத்துள்ள சோளிங்கரில் இரு திரையரங்குகளில் (காம்ப்ளக்ஸ்) இந்தப் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. போனர்கள், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டன.
படம் தொடங்க சில நிமிடங்கள் இருக்கும்போது திடீரென தியேட்டரில் தீ பற்றியது. இதனால் உடனடியாக தியேட்டர் மூடப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.
நிலைமை சரியான பிறகு, மீண்டும் வேட்டைக்காரன் படத்தை தியேட்டர் நிர்வாகம் திரையிடவில்லை. மாறாக 2012 படத்தை ஓட்டினர்.
இதனால் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Comments


Click it and Unblock the Notifications