twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேட்டைக்காரன்... தியேட்டரில் தீ!

    By Staff
    |

    Vettaikkaran
    வேட்டைக்காரன் படம் திரையிடுவதாக இருந்த இரு திரையரங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதால், அந்தப் படத்துக்கு பதில் 2012 படம் திரையிடப்பட்டுள்ளது.

    விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் வெளியானது.

    வேலூரை அடுத்துள்ள சோளிங்கரில் இரு திரையரங்குகளில் (காம்ப்ளக்ஸ்) இந்தப் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. போனர்கள், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டன.

    படம் தொடங்க சில நிமிடங்கள் இருக்கும்போது திடீரென தியேட்டரில் தீ பற்றியது. இதனால் உடனடியாக தியேட்டர் மூடப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.

    நிலைமை சரியான பிறகு, மீண்டும் வேட்டைக்காரன் படத்தை தியேட்டர் நிர்வாகம் திரையிடவில்லை. மாறாக 2012 படத்தை ஓட்டினர்.

    இதனால் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X