18+: என்னடா வாழைப் பழத்தை எல்லாம் காட்டுறீங்க.. இரண்டாம் குத்து ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கெளதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் மற்றொரு அடல்ட் ஹாரர் காமெடி படம் ஆன் தி வே.

ஹீரோ அவதாரம் எடுத்துள்ள சந்தோஷும், பிக்பாஸ் டேனியலும் இரண்டு வாழைப் பழத்தை அந்த இடத்தில் வைத்தபடி படு ஆபாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

அதிகரிக்கும் ஆபாச படங்கள்

அதிகரிக்கும் ஆபாச படங்கள்

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது அந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து இதுபோன்ற ஆபாச படங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

அறிவித்தபடி சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் முதல் இரு அடல்ட் படங்களில் நடித்த கெளதம் கார்த்திக் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே எதிர்பார்த்த இரண்டாம் குத்து என்கிற டைட்டிலையே இயக்குநர் சந்தோஷ் உறுதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

என்ன சர்டிபிகேட்

என்ன சர்டிபிகேட்

வழக்கம் போல இந்த படத்திற்கும் ஏ சர்டிபிகேட்டை சந்தோஷமாக வாங்கி இருக்கிறார் இயக்குநரும் ஹீரோவுமான சந்தோஷ் பி. ஜெயக்குமார். இளைஞர்களை டார்கெட் செய்து படங்களை இயக்கி ஹிட் அடித்து வரும் அவருக்கு இந்த படமும் க்ளிக் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆபாசத்தின் உச்சம்

ஆபாசத்தின் உச்சம்

இரண்டு பெரிய வாழைப் பழங்களை அந்த இடத்தில் தூக்கிப் பிடித்தபடி தற்போது வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். அடல்ட் பட ரசிகர்கள் இந்த படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக்கிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். நடுவில் பிகினியில் வரும் நாயகி யார் என்ற தேடலிலும், இளைஞர்கள் ஜூம் செய்து வருகின்றனர்.

சன்னி லியோன் படத்தின் காப்பியா

சன்னி லியோன் படத்தின் காப்பியா

இந்தியில் வெளியான நடிகை சன்னி லியோனின் மஸ்திஜாதே படத்தின் போஸ்டரை காப்பி அடித்து இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது என்றும், படமே அந்த படத்தின் காப்பியா? என்றும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்குக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.

இந்த நேரத்தில் இது தேவையா

இந்த நேரத்தில் இது தேவையா

நாடு முழுவதும் #JusticeForManishValmiki என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கொதித்து வரும் நேரத்தில் இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் தேவை தானா? என அதனை ரிலீஸ் செய்த நடிகர் கெளதம் கார்த்திக்கையும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X