பிரபல நடிகையை ஏமாற்ற முயன்ற கும்பல்.. மோசடியில் சிக்கி ஏமாந்த 18 இளம் பெண்கள்..அதிர்ச்சித் தகவல்!

By

கொச்சி: திருமணம் செய்துகொள்வதாக பழகி நடிகை பூர்ணாவிடம் மோசடியில் ஈடுபட முயன்ற கும்பல் 18 பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

Recommended Video

திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா

நடிகை பூர்ணாவின் அம்மா ரவ்லா, கேரளா மாநிலம் மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்கவில்லை என்றால் அழித்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

திருமணம்

திருமணம்

இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன் ரபீக் என்பவர் பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டு, திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் நன்றாகப் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர்.

சந்தேகம் அடைந்தனர்

சந்தேகம் அடைந்தனர்

திருமணம் பற்றி பேசுவதுபோல அவரது வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து வந்துவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன், நடிகையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர். மறுத்ததால் மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார்.

தனி அறையில்

தனி அறையில்

வழக்குப் பதிவு செய்து திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். சிலரைத் தேடி வருகிறோம்' என்றனர். பின்னர் கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதும் மேலும் ஒரு நடிகை மற்றும் 5 மாடல்கள், இந்தக் கும்பலிடம் தாங்களும் ஏமாந்ததாகப் புகார் கூறினர். தனி அறையில் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

நகைகள், பணம்

நகைகள், பணம்

அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள், இவர்களிடம் நகைகள், பணத்தைப் பறித்துள்ளனர். பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பூர்ணா அளித்த பேட்டியில், அவர்களை பார்த்தபோது, எங்களுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து கேட்கத் தொடங்கியதும் வீட்டில் இருந்து வெளியேறுவதிலேயே குறியாக இருந்தனர். பிறகு பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினர்' என்று தெரிவித்திருந்தார்.

சிக்கிய 18 பெண்கள்

சிக்கிய 18 பெண்கள்

இந்நிலையில், இந்தக் கும்பலிடம் மொத்தம் 18 பெண்கள் சிக்கி ஏமாந்துள்ளனர். பணம், மற்றும் நகைகளை இழந்துள்ளனர். இதில் சிலர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். சிலர் புகார் கொடுக்கவில்லை. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நடிகை பூர்ணா, கொச்சி காவல் நிலையத்துக்கு நேரில் சென்று நடந்ததை போலீசாரிடம் விவரிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X