ஹோட்டலுக்கு வரவழைத்து சிக்க வைத்த ஸ்னேகா!

பெங்களூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் ராகவேந்திரா (35) தன்னை படத் தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்டு ஸ்னேகாவின் தந்தையை சந்தித்தார்.
பின்னர் ஸ்னேகாவின் செல்போனுக்கு இரவு பகலாக ஆபா, மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல் எஸ்எம்எஸ்களை அனுப்பி வந்ததோடு, படப்பிடிப்புக்கே வந்தும் தொல்லை தர ஆரம்பித்தார்.
இதையடுத்து போலீசில் புகார் தந்து அந்த நபரை கைது செய்ய வைத்தார் ஸ்னேகா. அவரை போலீசில் சிக்க வைத்தது எப்படி என்பது குறித்து ஸ்னேகா அளித்துள் பேட்டி:
இனிமேல் என்னை வந்து பார்ப்பதையும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு ராகவேந்திராவை பலமுறை எச்சரித்தேன். ஆனால் அவர் திருந்தவில்லை.
தொடர்ந்து காதல் எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்தவர் பின்னர் மிரட்ட ஆரம்பித்தார். இதுபற்றி ஆர்ட் டைரக்டரான என் அக்காள் கணவர் சுரேசிடம் சொன்னேன். அவர் போலீசுக்கு தகவல் தந்தார்.
போலீசார் சொன்னபடி, ராகவேந்திராவிடம் சுரேஷ் போனில் பேசினார். உங்களை ஸ்னேகா நேரில் சந்தித்து பேச விரும்புகிறார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வர முடியுமா? என்று கேட்டார்.
ராகவேந்திரா உடனே அங்கு வந்தார். அன்றிரவு இரவு 7 மணிக்கு நானும், சுரேஷ் மற்றும் போலீசாரும் அந்த ஹோட்டலுக்குச் சென்றோம். நான் காபி ஷாப்பில் நான் ஒரு ஓரமாக போய் அமர்ந்து கொண்டேன். சுரேசும், போலீசாரும் வேறு ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
அப்போது ராகவேந்திரா அங்கு வந்து என் எதிரே அமர்ந்தார். உடனடியாக அவரை போலீசார் பிடித்தனர் என்றார்.


Click it and Unblock the Notifications











