twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

    By Shankar
    |

    Vadivelu
    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவுக்கு நிற்கக் கூட நேரமில்லை. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸி.

    ஆனால் இன்று, அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இனிவரும் நாட்களிலாவது இருக்குமா என்று பார்த்தால் அதுவும் சிரமம்தான். எல்லாம் இந்த தேர்தல் செய்த வேலை.

    தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜயகாந்தை ஏகத்துக்கும் அவர் விமர்சித்ததுதான் இத்தனைக்கும் காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது படத்திலிருந்து வடிவேலுவை நீக்கிவிட, இப்போது அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் மதுரை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வைகைப் புயல்.

    இந்த நிலையில் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சி செய்தியை அவருக்கு தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் 5 ஆண்டுகளிலும் புதுப்படங்கள் எதிலும் வடிவேலு நடிகக்கூடாது என வாய்மொழி உத்தரவாக முக்கிய சினிமா சங்கங்களுக்கு போடப்பட்டுள்ளதால் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

    முன்பு 2006-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், கருணாநிதியை தரக்குறைவாகப் பேசியதற்காக நடிகர் செந்திலையும் திரையுலகம் கடந்த 5 ஆண்டுகளில் கண்டுகொள்ளாமல் இருந்தது நினைவிருக்கலாம்.

    English summary
    The film Industry has almost alienating comedy king Vadivelu because of his nasty comments on actor turned politician Vijayakanth in the Tamil Nadu election 2011.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X