ர்வதேச திரைப்பட விழாவின்-தலைமை கமல்!

By Staff

Kamal with Rekha
கோவா தலைநகர் பனாஜியில் வருகிற 22ம் தேதி தொடங்கும் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI-2008) தலைமை விருந்தினர்களாக கமல்ஹாசனும், முன்னாள் பாலிவுட் தேவதை ரேகாவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பனாஜியி்ல் ஆண்டுதோறும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.

இதற்கு தலைமை விருந்தினர்களாக கமல்ஹாசனும், ரேகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அவர்கள் செயல்படுவார்கள்.

தெலுங்கைக் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை இலியானா சிறப்பு விருந்தினராக இருப்பார். இவர் கோவாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியை பாலிவுட் நடிகை அம்ரிதா ராவ் தொகுத்து வழங்குவார்.

திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் உலகம் முழுவதிலுமிருந்து 15 படங்கள் பங்கேற்கின்றன.

இதுதவிர வெளிநாட்டு இந்தியர்கள் தயாரித்துள்ள, இயக்கியுள்ள படங்களும் தனிப் பிரிவின் கீழ் திரையிடப்படவுள்ளது.

திலீப் குமார், லதா மங்கேஷ்கர், சரோஜாதேவி, தபன் சின்ஹா ஆகியோரின் படங்களும் தனியாக திரையிடப்படும். இவை வாழ்நாள் சாதனைப் பிரிவின் கீழ் திரையிடப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X