ஸ்டாலினுக்கு கமல்-நிகில் வாழ்த்து!

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் துணை முதல்வர் எனும் பெருமை பெற்றுள்ள முக ஸ்டாலினுக்கு திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்துக் கூறி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்கெனவே ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். திரையுலகப் பிரபலங்கள் தினசரி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துக் கூறியவண்ணம் உள்ளனர்.
சமீபத்தில் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய பிரபலம் நடிகர் கமல்ஹாஸன். தனது மீடியா மேனேஜர் நிகில் முருகனுடன் ஸ்டாலினின் இல்லத்துக்கே சென்று வாழ்த்துக் கூறினார் கமல்.
ஸ்டாலின் மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.
Comments


Click it and Unblock the Notifications