twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாசம்-ராக்கி சாவந்த் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!

    By Sudha
    |

    Rakhi Sawant
    என்டிடிவி சானலில் ஒளிபரப்பாகும் ராக்கி சாவந்த் நிகழ்ச்சியை முக்கிய நேரத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்திய சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் ஆய்வு செய்தது. அப்போது சில நிகழ்ச்சிகள் சர்ச்சைக்குரியவைகளாக இருப்பது தெரிய வந்தது.

    இவற்றில் முக்கியமானது, இந்தி நடிகை ராக்கி சாவந்த் என்டிடிவி இமேஜ் சேனலில் தொகுத்து வழங்கும் 'ராக்கி கா இன்சாப்'.

    இதில் ஆபாசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்துவதாகவும் பங்கேற்பவர்களைத் திட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரை ஆண்மையில்லாதவர் என்றெல்லாம் ராக்கி சாவந்த் விமர்சித்தார். இதனால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தினர். இது தொடர்பாக ராக்கி சாவந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ராக்கி சாவந்த் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிக்கு இடையிலான நேரத்தில் ஒளிபரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாக தெலுங்கு எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்போது கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த விவகாரமும் கவனிக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X