வித்யா 'சில்க்' பாலனுக்கு தமிழ் முறைப்படி கோவிலில் திருமணம்: 18 புடவைக்கு ஆர்டர்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும், அவரது காதலர் சித்தார்த் ராய் கபூருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஏற்கனவே துவங்கிவிட்டதாம்.

கேரளாவில் இருந்து போய் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் வித்யா பாலன். அவருக்கும், யுடிவியைச் சேர்ந்த சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே நீண்ட காலமாக காதல் உள்ளது. இந்நிலையில் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகள் கூட ஜரூராக நடந்து வருகிறதாம்.

18 சேலைகளுக்கு ஆர்டர் கொடுத்த வித்யா

18 சேலைகளுக்கு ஆர்டர் கொடுத்த வித்யா

வித்யா பாலனுக்கு காஞ்சீபுரம் பட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் அவர் தனது திருமணத்திற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளரான சபயசாச்சியிடம் 18 சேலைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். வித்யாவின் சேலைக்கு பட்டுத்துணி தேட சபயசாச்சி சென்னை வருகிறாராம்.

கோவிலில் தென்னிந்திய முறைப்படி திருமணம்

கோவிலில் தென்னிந்திய முறைப்படி திருமணம்

வித்யாவின் திருமணம் தமிழ் முறைப்படி கோவிலில் வைத்து நடக்கிறதாம். திருமணத்தை எளிமையாக நடத்த மணமக்கள் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

என்ன நகை அணியப் போகிறார்?

என்ன நகை அணியப் போகிறார்?

வித்யா பாலன் ரன்கா ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறார். ஆனால் திருமண நாளன்று அவர் என்ன நகைகள் அணிவார் என்று தெரியவில்லை.

மணப்பெண் வித்யா

மணப்பெண் வித்யா

ரன்கா ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் மணப்பெண்ணாக போஸ் கொடுத்த வித்யா விரைவில் நிஜமாகவே மணப்பெண்ணாகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X