கைதான போலி இயக்குநர் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள்!

By Staff

சென்னை: சினிமா ஆசை காட்டி பெண்களிடம் பணம் மற்றும் செக்ஸ் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள போலி டைரக்டர் அரவிந்தன் மீது பல பெண்கள் பகீர் குற்றச்சாட்டுகளை போலீசாரிடம் தெரிவித்தனர்.

ஜீனியஸ் பிலிம் சிட்டி என்ற பெயரில் சென்னை தி நகரில் ஒரு திரைப்பட பயிற்சிக் கல்லூரியை நடத்தி வந்த அரவிந்தன் ஜி மேத்தா என்பவரை மோசடி வழக்கில் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இவர் நிலவே வருக என்ற பெயரில் படம் எடுப்பதாகவும் அதில் வாய்ப்புத் தருவதாகக் கூறி ஜெனிபர் என்ற பெண்ணிடம் ரூ. 4.5 லட்சம் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் அரவிந்தன் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அவர் மீது புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன. ஏராளமான ஆண்களையும், பெண்களையும் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டதாக அரவிந்தன் மீது ஏராளமான குற்றம் சுமத்தி வருகின்றனர்.

செக்ஸ் மோசடி புகார்களும் வந்துள்ளன. பெண்கள் சிலர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

சென்னை கிண்டி மடுவங்கரையை சேர்ந்த மணிக்குமார் என்ற வாலிபர் ரூ.50,000 கொடுத்து ஏமாந்துவிட்டதாக தனது மனுவில் கூறியிருந்தார்.

'தாய், தந்தை, தாரம்' என்ற தன்னுடைய படத்தில் 2வது கதாநாயகனாக நடிக்க வைப்பதாக சொல்லி அவரிடம் அரவிந்தன் பணம் பறித்துவிட்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சி.ஐ.டி. நகரை சேர்ந்த நசீமா அக்தர் என்ற பெண்மணியும் தன்னுடைய மகனை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.50,000 ஏமாற்றிவிட்டதாக அரவிந்தன் மீது புகார் கொடுத்துள்ளார்.

மூலக்கடையை சேர்ந்த பானு என்ற பெண் கொடுத்த மனுவில், என்னை டப்பிங் குரல் நடிகையாக சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று கூறி ரூ.10,000 பறித்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது புகாரில் அரவிந்தனோடு அவரது நண்பர் பாபு என்பவர் உதவியாளராக இருந்தார். அவர் எனக்கு பாலியல் டார்ச்சர் தந்தார். அவரது ஆசைக்கு நான் உடன்படாததால் சினிமா உலகத்தில் உன்னை நுழையவிடாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என்று கூறியுள்ளார்..

பின்னர் பானு நிருபர்களிடம் கூறுகையில் சினிமா ஆசை காட்டி பாபு, பல அப்பாவி பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றார்.

சென்னை தரமணி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கரோலின் என்ற பெண்ணும் அரவிந்தனிடம் ரூ.35,000த்தை இழந்துள்ளார். தன்னுடைய படத்தில் 2வது கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொல்லி கரோலினிடம், அரவிந்தன் பணம் கறந்துள்ளார்.

இப்படியாக ஜெயசித்ரா, சாந்தி, விஜி என அரவிந்தனிடம் ஏமாந்த பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X