வேலைக்காரிதான் என் கணவரை தூண்டியிருப்பார்-ஷைனியின் மனைவி

By Staff

shiny with wife
மும்பை: எனது கணவர் 100 சதவீதம் அப்பாவி. அவர் யாரையும் கற்பழிக்கவில்லை. வேலைக்காரிதான் எனது கணவரை தூண்டிவிட்டு உடலுறவுக்கு அழைத்திருப்பார் என்று பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜாவின் மனைவி அனுபமா கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அனுபமா அகுஜா. அப்போது தனது கணவரை தான் நம்புவதாகவும், அவருக்குத் துணையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து அனுபமா கூறுகையில், வேலைக்காரியை ஷைனி கற்பழித்திருப்பார் என்பது அப்பட்டமான பொய். அதற்கு சான்ஸே இல்லை. எனக்கு எனது கணவரை 15 வருடங்களாக தெரியும். அவர் 100 சதவீத அப்பாவி.

அவர் எனது நல்ல நண்பர், எனது உயிர். அவரால் யாரையும் கற்பழிக்க முடியாது.

சிலர் சேர்ந்து செய்த சதியால்தான் அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக யார் சதி செய்கிறார்கள் என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. அதை போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் குற்றமற்றவராக விடுதலை ஆவார் என்று முழுமையாக நம்புகிறேன் என்றார் அனுபமா.

மருத்துவப் பரிசோதனையில் ஷைனி குற்றம் இழைத்தது உண்மைதான் என்று தெரிய வந்தால் என்ன செய்வீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது கோபத்துடன், சூரியனால் மேற்கில் உதிக்க முடியுமா. எனக்கு எனது கணவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் அவருடைய பெருமைக்குரிய மனைவி என்றார் அனுபமா.

இதற்கிடையே, ஜூலை 2ம் தேதி வரை ஷைனியை சிறையில் அடைக்க மும்பை கோர்ட் இன்று உத்தரவிட்டது.

இன்றுடன் ஷைனியின் சிறைக்காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X