பிரபாகரன் சிங்களப் படத்திற்கு ஜூன் 9ம் தேதி வரை தடை நீட்டிப்பு

பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் இழிவாக சித்தரித்திருப்பதாக கூறி பிரபாகரன் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரபாகரன் படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரதிவாதிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததாலும், படச்சுருளை வைத்துள்ள ஜெமினி கலர் லேப் நிறுவனத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டதாலும் இடைக்கால தடையை வரும் ஜூன் 9-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











