பாடலாசிரியராக உயர்ந்த பத்திரிக்கையாளர் முருகன் மந்திரம்

விருந்தாளி படத்தில் கடிதமே கடிதமே, எந்தன் உயிரே, கொக்க கொக்க கோழி, ஆச அரக்கி ஆகிய நான்கு பாடல்களை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். இது தவிர படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்றுள்ள பாடலையும் எழுதியிருக்கிறார்.
தொடர்ந்திடும் பயணங்களே
தொடருமா உறவுகளே
வாழ்க்கையின் பாதையில்
யாருடன் யார் வருவார்
என்ற அழுத்தமான வரிகளுடன் க்ளைமாக்ஸில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் பாடியுள்ளார்.
பேசுவது கிளியா, காதல் தோழி, காதலை பறிக்காதே படங்களில் பாடல்கள் எழுதியுள்ள முருகன் மந்திரம் தொடர்ந்து பல பாடங்களில் பாடல்கள் எழுதி வருகிறார்.
Comments
பத்திரிக்கையாளர் முருகன் மந்திரம் பாடலாசிரியரான பத்திரிக்கையாளர் விருந்தாளி jorunalist murugan manthiram song writer virunthali movie


Click it and Unblock the Notifications