பில்லா 2... விலகினார் விஷ்ணுவர்தன்!!

By Shankar

அஜீத் நடிக்கும் பில்லா படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் விஷ்ணுவர்தன்.

அவருக்கு பதிலாக சக்ரி டோலட்டி பில்லா -2ன் இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி... ஏன் விலகினார் விஷ்ணு?

அவர் தரப்பில் கூறப்படும் விளக்கம் இது:

"விரைவில் பில்லா 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட வேண்டிய கட்டாயம். நானோ இப்போது பவன் கல்யாண் நடிக்கும் தி ஷேடோ தெலுங்குப் படத்தில் பிஸியாக உள்ளேன்.

இந்த நேரத்தில் பில்லா 2-யும் ஆரம்பித்துவிட்டால், தேவையற்ற சிக்கல்கள் நேரும். எனவே நானாகவே முன்வந்து இந்த பெரி்ய வாய்ப்பை விட்டுத் தருகிறேன்" என்றார் விஷ்ணு.

ஆனால் உண்மையில் பில்லா 2 இப்போதைக்குத் துவங்கும் படமல்ல. காரணம் அஜீத் மங்காத்தாவை முடிக்கவே இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படுமாம். அதன் பிறகு குறைந்தது 6 மாதங்களாவது அவர் ஓய்வெடுத்த பிறகுதான் புதிய படம் தொடங்குவார். உண்மை இப்படியிருக்க, விஷ்ணு விலகியிருப்பதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பில்லா 2 படத்தைத் தயாரிப்பவர்கள் அமரர் கே பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸும், இன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும். ரஜினி நடிப்பில் சரித்திரம் படைத்த பழைய பில்லாவை எடுத்தது இதே கே பாலாஜிதான் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X