ப்ரொபோஸ் செய்த 18 வயது பெண்: மாதவன் என்ன பதில் அளித்தார் தெரியுமா?
Recommended Video

சென்னை: நடிகர் மாதவனுக்கு 18 வயது பெண் ஒருவர் ப்ரொபோஸ் செய்ய அவர் அளித்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சாக்லேட் பாயாக நடிக்க வந்த மாதவன் மெச்சூரான நடிகராகிவிட்டார். அவருக்கு 49 வயதானாலும் இன்னும் பழைய மேடி போன்று தான் உள்ளார். இந்த மாதவனுக்கு வயசே ஆகாதா என்று ரசிகர்களும், ரசிகைகளும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மனுஷன் இன்னும் அப்படியே இருக்கிறார்.

மாதவனை பார்த்து கிளீன் ஷேவ் லுக்கில் இருக்கும் ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட, ஆசைப்படும் பெண்கள் பலர். இந்நிலையில் மாதவன் ஒரு செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார்.
அந்த செல்ஃபியில் மாதவன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்தாலும் அதுவும் க்யூட்டாக இருந்தது. அவரின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஸ்வீட், க்யூட் என்று கமெண்ட் போட்டனர். இந்நிலையில் 18 வயது பெண் ஒருவர், மாதவனை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
இளம்பெண்ணின் கமெண்ட்டை பார்த்த மாதவனோ, கடவுள் ஆசிர்வதிக்கட்டும்... உங்களுக்கு என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பார் என்று பதில் அளித்துள்ளார்.
மாதவனின் பதிலை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். சிலரோ, அப்பா வயது நடிகரையா திருமணம் செய்ய ஆசைப்படுவது என்று அந்த சின்னப் பெண்ணை விளாசியுள்ளனர்.
இத்தனை ஆண்டுகளாக நடிகராக இருந்த மாதவன் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அந்த படம் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸாக உள்ளது. அந்த படத்திற்காக உடல், பொருள், ஆவியை கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறார் மாதவன்.
மாதவனின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது ராக்கெட்ரி படத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. இதற்கிடையே மகன் வேதாந்தாலும் மாதவன் மகிழ்ச்சியில் உள்ளார். வேதாந்த் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் மேல் பதக்கம் வாங்கிக் கொண்டிருக்கிறார். மகனை தன் போன்று நடிகராக்காமல் அவர் விரும்புவதை செய்ய அனுமதித்த மாதவனை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











