Just In
- 23 min ago
அப்ப அமேசான்ல வராதா? விஜய்யின் பிகில் டிஜிட்டல் ரிலீசுக்கு தடை!
- 1 hr ago
அமேசான் காட்டில் அனகோண்டா.. குஷ்புவையும் விஷாலையும் டபுள் மீனிங்கில் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
லேடீஸ் நாட் அலவ்டு.. அடப்பாவமே ஷகிலாவுக்கே இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்!
- 1 hr ago
வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்!
Don't Miss!
- Education
அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Lifestyle
தெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா?
- Sports
அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம்.. இந்தியாவிற்கு ஆப்பு இருக்கிறது.. கீரன் பொல்லார்டு வார்னிங்!
- Technology
வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- News
ஹைதராபாத் என்கவுண்டர்.. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு.. உண்மை கண்டறியும் குழு விரைகிறது
- Finance
வொடாபோன் ஐடியா கடைய மூடிருவோம்..! அரசு உதவி கேட்டு கதறும் பிர்லா தலைவர்..!
- Automobiles
புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்!
சென்னை: 18 ஆண்டுகள் அல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவில் வெளியான வித்தியாசமான படங்களின் பட்டியலில் எப்பவுமே ஆளவந்தான் முதலிடம் பிடிக்கும்.
ரஜினிக்கு ஒரு பாட்ஷாவை தந்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாதான் கமலின் ஆளவந்தானை இயக்கினார்.
2001ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வெளியான ஆளவந்தான் படம் இன்றுடன் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க!
|
இரண்டுமே மிருகம்
ஆளவந்தான் படம் குறித்து அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, ஆளவந்தான் ஸ்க்ரிப்ட் எழுதும் போது, ஒண்ணு மிருகம் இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம் என்றே அதை உருவாக்கினாராம். ஆளவந்தானின் முதல் காட்சியில் கமல்ஹாசனை சங்கிலியால் பிணைக்கப்பட்டு மிருகத்தை அழைத்து வருவதை போலவே கொண்டு வந்திருப்பார்கள். ராணுவ வீரரான இன்னொரு கமல்ஹாசன், தனது மனைவியை காப்பாற்ற மிருகமாக மாறி நந்து கமலுடன் மோதும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்.

கில் பில்
கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களை ரீமேக் செய்தும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டும் பல படங்களை இயக்கியுள்ளனர். ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான குவன்டின் டரன்டினோ இயக்கத்தில் வெளியான கில் பில் படத்திற்கு, கமலின் ஆளவந்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று டரன்டினோவே கூறியுள்ளார்.
|
அப்பவே அப்படி
இந்த ஆண்டு வெளியான அமலாபாலின் ஆடை படம் விமர்சகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆளவந்தான் படத்திலேயே கமல் முழு நிர்வாணமாக நடித்து உலகநாயகனாக மாறியிருப்பார். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் ஆளவந்தான் படம் சரியாக போவததற்கு காரணமாகவும் அந்த காட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
|
ஜோக்கருக்கு பாஸ்
இந்த ஆண்டு வெளியான ஜோக்கர் படம் மார்வெல் படங்களுக்கு வசூல் ரீதியாக டஃப் கொடுத்துள்ளது. சரியான குடும்ப சூழல் இல்லாமல் வளரும் சிறுவன் எப்படி மன வளர்ச்சி பாதிப்படைந்து சைக்கோவாக மாறுகிறான் என்ற இதே கதையைத்தான் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆளவந்தானாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நான்
திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘உங்கள் நான்' எனும் பிரம்மாண்ட பாராட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா தலைமையில் 120 நிமிடங்கள் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம். ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, மணிரத்னம், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம் தான்.