அனில் அம்பானியின் 'பிக் ஓயே'

ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சினிமா தொடர்பான இணையதளத்தையும் அது தொடங்கியுள்ளது.
பிக்ஓயே என பெயரிடப்பட்டுள்ள அந்த தளத்தில் திரைப்படங்கள் குறித்த தகவல்கள், செய்திகள், விமர்சனங்கள், வீடியோ, கிசுகிசு தகவல்கள், டிரெய்லர்கள், திரைப்படங்களுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்வது என ஏராளமானவை நிரம்பியுள்ளன.
பிளாக்குகளும் இந்த தளத்தில் உள்ளன. ஸ்டார்களை அடிப்படையாகக் கொண்ட வீடியோ கேம்களுக்கும் தனிப் பகுதி உள்ளது.
இந்த இணையதளத்தில் பாலிவுட், ஹாலிவுட் திரைத் துறை தவிர தமிழ் திரைத்துறை குறித்த தகவல்களும், வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக் ஓயே இணையதளத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் மும்பை நகரில் பிரமாண்ட விளம்பரப் பிரசாரத்தையும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் செய்திருந்தது.


Click it and Unblock the Notifications











