கள்ளக்காதல்-சினிமா ஊழியர் தற்கொலை

பெரம்பலூர்: கல்யாணமாகி மனைவி இரு மகன்களுடன் வாழ்ந்து வந்த சினிமா ஊழியர், கல்யாணமான ஹேர் டிரஸ்ஸர் பெண்ணுடன் கள்ளக்காதல் புரிந்து, இறுதியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவருக்கு மோகனா என்ற மனைவியும், வினோத், சரத் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், சினிமா சிகை அலங்காரம் செய்யும் முத்தழகி (28) என்ற பெண்ணுடன் கள்ளக் காதல் கொண்டார். முத்தழகிக்கு ஏற்கனவே கல்யாணமாகி, சேகர் என்ற கணவர் உள்ளார். ஆனாலும் கள்ளக்காதல் கண்ணை மறைக்கவே, மணிகண்டனுடன் ரகசிய உறவைத் தொடர்ந்துள்ளார் முத்தழகி.

இந்த நிலையில், நான் அவளை சந்தித்த போது என்ற படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூர் பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக மணிகண்டன் அங்கு சென்றிருந்தார். பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார்.

கள்ளக்காதலியைப் பிரிந்து இருக்க முடியாத அவர் 2 நாட்களுக்கு முன்பு முத்தழகிக்கு போன் செய்து வரவழைத்தார். அவரும் வந்து சேர்ந்தார். லாட்ஜில் ஒரே அறையில் தங்கினர். தீபாவளியன்று இருவரும் சினிமாவுக்குப் போய் வந்தனர்.

அன்று இரவு மணிகண்டனின் தாயார் போன் செய்து வீட்டுக்குப் பணமே அனுப்பவில்லையே என்று வேதனைப்பட்டு கூறியுள்ளார். இது கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த மணிகண்டனின் மனதைத் தாக்கியது.

இதனால் வேதனையில் மூழ்கிய மணிகண்டன், போர்வையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்காதலால் குடும்பத்தை மறந்த சினிமா தொழிலாளி படப்பிடிப்புக்கு வந்த இடத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X