நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை: பிரபுதேவா - நயன்தாராவுக்கு மீண்டும் சம்மன்

இதனால் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரபு தேவா மனைவி லதா என்கிற ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், "பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. இதனால் என்னையும், குழந்தைகளையும் பிரபுதேவா பார்க்க வருவதில்லை, குடும்பச் செலவுக்கு பணம் தருவதில்லை. எனவே பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்", என்று கோரியிருந்தார்.
அக்டோபர் 6ம் தேதி மீண்டும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார் ரமலத். அதில், "பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, நான் தொடர்ந்த வழக்கு முடியும் வரை பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இருவரும் இணைந்து கணவன், மனைவிபோல் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதற்கும், மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்", என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 19ல் பிரபுதேவாவும், நயன்தாராவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதையடுத்து, வழக்கு இன்று முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் ஏற்கனவே இருவருக்கும் சம்மன் அனுப்பிவிட்டது.
எனவே இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை.
எனவே மீண்டும் இருவருக்கும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நடிகர் சங்கம் மூலமாகவும் நயன்தாராவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
வழக்கு நவம்பர் 23 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











