இஸ்லாமுக்கு எதிராக பேசியதாக ஷாருக் கான் மீது வழக்கு!

இதுகுறித்து பந்த்ரா காவல் நிலைய முதுநிலை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜார்ஜ் கூறுகையில், நடிகர் ஷாருக் கான் முஸ்லீம்களின் உணர்வுகள் புண்படும்படியாக பேசியுள்ளார். இதுகுறித்து பத்திரிக்கைளில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காலித் பாபு குரேஷி என்ற வழக்கறிஞர் புகார் கொடுத்தார்.
காலித் பாபு குரேஷி கொடுத்த புகாரில், நபிகள் நாயகம் குறித்து ஷாருக் கான் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது, மிகக் கடுமையான கருத்து அது என்று தனது புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் தற்போது வழக்குப் பதிவு செய்து ஷாருக் கான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம்.
ஷாருக்கான் தவிர அவரது பேச்சு இடம் பெற்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளர் மற்றும் அந்தக் கட்டுரையை எழுதியவர் ஆகியோர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஷாருக்கான் மீது மத உணர்வுகளை வேண்டும் என்றே திட்டமிட்டு அவமதித்தல், புண்படுத்துதல் மற்றும் ஒரே குறிக்கோளோடு பலரும் சேர்ந்து செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜார்ஜ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications