நடிகை ஹேமமாலினி கர்நாடகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு போட்டி! -பாஜக அறிவிப்பு

பா ஜ கவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவர் ஹேமமாலினி. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். அந்த பதவியின் 5 ஆண்டுகால பணியையும் அவர் நிறைவு செய்தார்.
இப்போது அவர் மீண்டும் ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுவார் என பா.ஜனதா தலைவர் ஆனந்த்குமார் நேற்று டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்று கட்சியினர் கோரி வந்த நிலையில், அங்கு ஹேமமாலினி நிறுத்தப்பட்டுள்ளது, கர்நாடக பாஜகவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications