twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரஜினி ஒரு ஜோக்கர்'!-ஜாகுவார் தங்கம் தாக்கு

    By Staff
    |

    Jaguar Thangam
    ரஜினி ஒரு ஜோக்கர், அவர் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் சினிமா ஸ்டன்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கம்.

    முதல்வர் விழாவில், அஜீத் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஜாகுவார் தங்கம் என்பவர்.

    இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, அனாமிகா என்ற கவர்ச்சி நடிகையை கற்பழித்தது மற்றும் மிரட்டி தன் கஸ்டடியில் வைத்துக் கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.

    பின்னர் வழக்கு, போலீஸ் விசாரணையைத் தவிர்க்க மீண்டும் அந்த நடிகையுடன் சமரசம் பேசவும் முயன்றவர்.

    இப்போது அஜீத் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பாகிவிட்டார்.

    முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், விழாவுக்கு நடிகர் நடிகைகளை மிரட்டிக் கூப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது முதல்வருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ரஜினி உடனே எழுந்து நின்று அஜீத்துக்கு கைதட்டி தனது பாராட்டைத் தெரிவித்தார்.

    ஆனால் இந்த விஷயத்தை முடிந்தவரை அரசியலாக்கும் முயற்சியில் சிலர் இறங்க, ஜாகுவார் தங்கமும் களத்தில் குதித்தார்.

    அஜீத்தை ஒருமையில் திட்டியதோடு, அவரை தமிழ் சினிமாவிலிருந்தே ஒழிக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.

    இந் நிலையில், தனது காரை அஜீத் ரசிகர்கள் நேற்று உடைத்துவிட்டதாக பரபரப்பு கிளப்பினார். அஜீத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    குறிப்பாக அஜீத்தே சம்பவ இடத்து ரசிகர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியதாக புகார் செய்தார். விசாரித்ததில் இது பொய் என்று தெரிந்து அஜீத் பெயரை புகாரில் சேர்க்க வேண்டாம் என போலீசார் கூறிவிட்டனர்.

    ஆனால் ஜாகுவாரின் தொடர் வற்புறுத்தல் மற்றும் இதை ஜாதிப் பிரச்சனையாக்கும் அவரது பேட்டிகள் காரணமாக, அஜீத் மேனேஜர் உள்பட 14 பேர் மீது எப்ஐஆர் போட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர் சென்னை மாநகர போலீசார்.

    நடிகர் சங்கத்தில் புகார்...

    இதற்கிடையே இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜாகுவார் தங்கம் அஜீத்துக்கு எதிராக நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளதாகக் கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், "அஜீத் மேனேஜர் மற்றும் ரசிகர்கள் என்னை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டினர். என் காரை உடைத்தனர். அஜீத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் எந்த ஊரிலும் நடக்க விடமாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். அஜீத்துக்கு சோறு போட்டது தமிழ் நாடு. ஆனால் அவர் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்" என்றார்.

    ரஜினி...

    அப்போது அஜீத்துக்கு ரஜினி அளித்த ஆதரவு குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

    அதற்கு, "ரஜினி ஒரு ஜோக்கர் மாதிரிதான். அவர் பேச்சையெல்லாம் யார் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்" என்றார் ஜாகுவார் தங்கம்.

    போலீஸ் பாதுகாப்பு:

    மேலும் அஜீத் வீட்டை முற்றுகையிடப் போவதாக ஜாகுவார் தங்கம் அறிவித்துள்ளதாலும் தனக்கு ஆதரவாக தனது சமூக பிரமுகர்கள் திரண்டு வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளதாலும் திருவான்மியூரில் உள்ள அஜீத் வீடு, சாலிகிராம அலுவலகம் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதேபோல கார் தாக்கப்பட்டதால் ஜாகுவார் தங்கத்தின் வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X