கலைஞர் டிவியில் சகலகலா வல்லவன்!

By Shankar

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சியான சகல கலா வல்லவன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, இளம் கலைஞர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாருதி நிறுவனத்தின் எஸ்டிலோ கார் பிராண்ட் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்கிறது.

தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைசாலிகளை இரண்டு கட்ட தேர்வுகள் மூலம் தேர்ந் தெடுத்து நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. 18-லிருந்து 35 வயது வரை உள்ள ஆண்- பெண்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், குழுவினராகவும் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரமேஷ்கண்ணா, பரத நாட்டியக் கலைஞரும் நடிகையுமான சுகன்யா, ஒளிப்பதிவாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட இளவரசு, பாடகர் மாணிக்க விநாயகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் போட்டியாளர்களின் திறமைகளைக் கொண்டு அடுத்தடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். காலிறுதி, அரையிறுதிச் சுற்றினைக் கடந்து இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் வெற்றி யாளருக்கு தமிழகத்தின் சகலகலா வல்லவன் பட்டமும், முதல் பரிசாக 'Zen Estilo' கார் ஒன்றும் பரிசாக வழங்கப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X