நடிகர் சங்க கட்டட நிதி: ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட்!

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்கும். இந்தக் கட்டடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் 2 தியேட்டர்கள், திருமண மண்டபம், ஷாப்பிங் மால், கருத்தரஹ்க கூடம், நட்சத்திர க்ளப் என சகல வசதிகளும் கொண்டதாக அமையும்.
இப்போது நடிகர் சங்கத்தில், ரூ.3.5 கோடி கையிருப்பில் உள்ளது. புதிய கட்டடம் கட்ட மேலும் பணம் தேவைப்படும்.
எனவே, வருகிற ஜனவரி மாதம் சென்னையில், மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். லோன் இல்லாமல் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்பதால் இந்த முடிவு. விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும், என்றார் சரத் குமார்.
Comments
சரத்குமார் நடிகர் சங்கம் கட்டட நிதி நட்சத்திர கிரிக்கெட் building fund nadigar sangam sarathkumar star cricket


Click it and Unblock the Notifications