பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரிக்கு விவாகரத்து!

By Staff

Prakash Raj with Family
சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

தென்னிந்தியாவின் மிகப் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை லலிதகுமாரியை காதலித்து மணம் புரிந்தார். முன்னாள் நடிகர் ஆனந்தனின் மகள்தான் லலிதகுமாரி.

இருவருக்கும் கடந்த 25.12.94-ல் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சிறந்த தம்பதிகளாகத் திகழ்ந்த இவர்களுக்குள் இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

கடந்த ஆண்டு லலிதாகுமாரியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் கணவரை விட்டு பிரிய லலிதாகுமாரி விரும்பவில்லை. எனவே, எப்படியாவது எனது கணவரை சேர்த்து வையுங்கள் என்று கோர்ட்டில் லலிதாகுமாரி கோரிக்கை விடுத்தார். எனது 2 பெண் குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழ்வதாகக் கூறினார்.

இந்த வழக்கை சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றம் விசாரணை செய்தது. இருவரும் பலமுறை கோர்ட்டில் வந்து ஆஜரானார்கள். சமரச பேச்சுவார்த்தை நடத்தி இவர்களை சேர்த்து வைக்க நீதிமன்றம் முயற்சி செய்தது. ஆனால், பலனில்லை.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லலிதாகுமாரி, பிரகாஷ்ராஜிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்தார். எனது கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் நான் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் என்றும், எனது 2 பெண் குழந்தைகளையும் நான் தான் கவனித்து வருகிறேன் என்றும் மனுவில் அவர் கூறியிருந்தார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும், கல்வி செலவுக்கும் பணம் தேவைப்படுவதால் மாதம் ரூ.2 லட்சம் வீதம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் லலிதாகுமாரி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, இருதரப்பு வக்கீல்களும் பிரகாஷ்ராஜையும், லலிதாகுமாரியையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

லலிதாகுமாரிக்கு கணிசமான தொகையை பிரகாஷ்ராஜ் வழங்க முன் வந்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு குழந்தைகள் யாரிடம் இருப்பது, அவர்களுக்கு என்ன செய்து தருவது, பிரகாஷ்ராஜ் தரப்பில் எவ்வளவு பணம் தருவது என்பது குறித்து இருவர் தரப்பிலும் பேசி முடிவு எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்டு புதிய மனு ஒன்றை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ராமலிங்கம் விசாரித்து நேற்று மாலையில் தீர்ப்பு வழங்கினார். பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்கப்பட்டதை ஏற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X