அதிமுக நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு ஆபாச மிரட்டல் -போலீஸில் புகார்

கே.பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சி.ஆர்.சரஸ்வதி. தற்போது அதிமுகவில் மேடைப் பேச்சாளராக உள்ளார்.
இவர் சென்னை போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், சில தினங்களாக மர்ம நபர் ஒருவர் எனது செல்போன் எண்ணுக்கு போன் செய்து ஆபாசமாக பேசி வருகிறார். யார் என்று கேட்டால் மிரட்டிப் பேசி விட்டு வைத்து விடுகிறார்.
நேற்று முன் தினம் என்னை மீண்டும் தொர்பு கொண்டு, தி.நகரில் உள்ள ஒரு ஹோட்டல் பெயரைச் சொல்லி அங்கு வருமாறு கூறினார். மேலம் ஆபாசமாகவும், வெளியில் சொல்ல முடியாத அறுவறுக்கத்தக்க வார்த்தைகளிலும் அவர் திட்டினார்.
கோபமடைந்த நான் எனது நம்பர் எப்படிக் கிடைத்தது, போலீஸில் புகார் செய்யப் போகிறேன் என்று கூறியபோது, இன்னொரு செல்போன் எண்ணைக் கொடுத்து, அவர்தான் பேசக் கூறினார் என்று கூறி போனை வைத்து விட்டார்.
அவர் கொடுத்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது ஒரு பெண் எடுத்தார். அவரிடம் நடந்ததைக் கூறியபோது, தனக்கும் இப்படி ஒரு நபர் போனில் ஆபாசமாக பேசி மிரட்டி வருவதாக கூறினார்.
இதன் மூலம் என்னைப் போல பல பெண்களிடம் அந்த நபர் ஆபாசமாக பேசி பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











