பார்கவி கொலை - திட்டமிட்டு செயல்பட்ட காதலன் பிரவீன்

By Staff

Bhargavi
ஹைதராபாத்: நடிகை பார்கவியைக் கொல்வதற்கு முன்பு நன்கு திட்டமிட்டு செயல்பட்டுள்ளார் தற்கொலை செய்து கொண்ட காதலன் பிரவீன்.

வளர்ந்து வந்த தெலுங்கு நடிகை பார்கவி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றதாக கூறப்படும் காதலன் பிரவீனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பிரவீன் எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதத்தில், பார்கவியை சயனைடு கொடுத்து கொல்லப் போவதாக எழுதப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவரைக் கத்தியால் குத்திக் கொல்ல வேண்டும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில் பார்கவியின் உதவியாளர் வெங்கட் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர் கூறுகையில், கடந்த 16-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு பிரவீன் பார்கவி வீட்டுக்கு போன் செய்தார். போனை நானே எடுத்து பேசினேன். அப்போது வீட்டில் பார்கவியின் அம்மா இருக்கிறாரா, பக்கத்து வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள். காவலாளி இருக்கிறாரா? படப் பிடிப்பு எத்தனை மணிக்கு என்பது போன்ற விவரங்களை கேட்டார்.

பின்னர் எனக்கு வேறு ஒரு வேலை கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். நான் படப்பிடிப்புக்கு தேவையான பொருட்கள், ஆடைகளை எல்லாம் பார்கவியின் காரில் வைத்து விட்டு வெளியில் சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.

பார்கவி வீட்டுக்கு நெல்லூரிலிருந்து டாக்சி ஒன்றைப் பிடித்து வந்துள்ளார் பிரவீன். அந்தக் காரின் டிரைவர் சாந்த் பாஷாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, அவர் கூறியதாவது ..

பிரவீன் ஐதராபாத் செல்லவேண்டும் என்று கூறி எனது காரில் வந்தார். வரும் வழியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து குளித்து விட்டு உடை மாற்றி வந்தார். அதிகாலை யில் பார்கவி வீட்டு முன்பு காரை நிறுத்தினேன்.

அப்போது பிரவீன் கத்தி, குளிர்பான பாட்டில், சயனைடு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காரில் இருந்து இறங்கினார். 1 மணி நேரத்தில் ஐதராபாத் நகரத்தை விட்டு வெளியில் சென்று வருமாறு கூறினார். நானும் அங்கிருந்து உடனே சென்று விட்டேன் என்றார்.

பிரியாணி சாப்பிட்டார்:

கொலை நடப்பதற்கு முந்தைய நாள் பிரவீன் நெல்லூரில் உள்ள தனது முதல் மனைவி டாலி வீட்டுக்கு சென்றார். தனது காரை முதல் மனைவியின் மகளுக்கு கொடுத்தார்.

பின்னர் 2-வது மனைவி சுவப்னாவிடம் போனில் பேசி இறால் பிரியாணி செய்து கொடுத்து அனுப்புமாறு கூறினார். அந்த பிரியாணியை விரும்பி சாப்பிட்டார். மகள் அக்ஷயா பற்றியும் நலம் விசாரித்தார்.

பின்னர் தனது தாயார் நிர்மலா தேவியை சந்தித்து ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை அவரிடம் கொடுத்தார்.

பார்கவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் பிரவீன் ஈடுபட்டுள்ளதாக போலீசார் நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X