ஐபிஎல் விவகாரம்: சோனி டிவி சிஇஓ ராஜினாமா!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு விவகாரத்தில் விளம்பரதாரர்கள் ஒப்பந்தம் குறித்து எழுந்த மோதல் காரணமாகவே தாஸ்குப்தா இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்யும் விளம்பர ஒப்பந்தத்தில் சோனியும் கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) கையெழுத்திட்டுள்ளன. இதேபோல ரிலையன்ஸ் பிக் டிவி மற்றும் பிசிசிஐ இடையே போட்டிகளை ஒளிபரப்புவது தொடர்பான ஒரு ஒப்பந்தம் இருந்தது. இதனை மீறி, சோனி நிறுவனம் ஏர்டெல்லுடன் ரூ. 30 கோடிக்கு தனி உள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
இதனை கடுமையாக எதிர்த்த பிக் டிவி, ஒரு கட்டத்தில் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.
இதனால் பிசிசிஐக்கு ரூ. 137 கோடி வரையிலும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம். இந்த நஷ்டத்தை சோனி நிறுவனம் தர வேண்டும் அல்லது ஏர்டெல்லுடன் போட்ட ஒப்பந்தத் தொகையை பிசிசிஐக்கு விட்டுத் தரவேண்டும் என கிரிக்கெட் வாரியம் நெருக்க ஆரம்பித்துள்ளது.
இது அனைத்துக்கும் குணால் தாஸ்குப்தாவே காரணம் என்று கைகாட்டப்பட்டதால், இப்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.
சோனியின் இடைக்கால சிஇஓவாக, அதன் தலைவர் மன்ஜித் சிங் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











