விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்

By Sudha

திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் கேப்டன் விஜயகாந்த் இயக்கி, நடித்திருக்கும் படம் ஓடிக்கொண்டிரு்ககையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

திருச்சிக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை 11.30 மணிக்கு விஜயகாந்த் நடித்திருக்கும் விருத்தகிரி படம் திரையிடப்பட்டது.

படம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே தியேட்டரின் மேல்பகுதியில் திடீர் என்று தீப்பிடித்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.

இந்த விபத்திற்கு காரணம் மின்கசிவு என்று கண்டுபிடிக்கப்பட்டது. புகை வந்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தியதால் பெரிய தீ விபத்து தவிர்கக்ப்பட்டது.

இந்த விபத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் நேற்று காலை காட்சி மற்றும் ரத்து செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தை ஆவலோடு பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்ததுடன் வீடு திரும்பினர்.

இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A theatre in Tiruchy near railway station road caught fire while showing Vijayakanth's movie Viruthagiri. Audience ran out of the theatre immediately.The morning show was cancelled beacause of this incident.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X