வாஸ்து நிபுணராகும் ஷோபா!

By Staff

Shoba Chandrasekar
விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் வாஸ்து நிபுணராக உருவெடுத்துள்ளார். தனது சாலிகிராமம் வீட்டை அவரே வாஸ்து முறைப்படி சீரமைத்துள்ளாராம்.

ஷோபா சந்திரசேகர் பன்முகம் கொண்டவர். திரைக்கதாசிரியர், பாடகி, கர்நாடக இசைக்கலைஞர் உள்பட பல துறைகளில் முத்திரை பதித்தவர். இப்போது வாஸ்து நிபுணராகவும் மாறியுள்ளார்.

இயக்குநர் சந்திரசேகர் விரைவில் ராகவ லாரன்ஸை வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதில் லாரன்ஸுக்கு ஜோடியாக சினேகா நடிக்கவுள்ளார். இந்த நிலையில் புதிய படத்தைத் தொடங்குவதற்கு முன்பு தனது வீட்டை வாஸ்துமுறைப்படி சரி செய்ய தீர்மானித்தார் ஷோபா.

இதையடுத்து ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக் கொண்டு தனது வீட்டை முழுமையாக மாற்றி அமைத்துள்ளார் ஷோபா.

ஷோபா வேகமாக தனது வீட்டை வாஸ்துப்படி மாற்றியதற்கு முக்கிய காரணம், சந்திரசேகர் இயக்கவுள்ள புதிய படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு சந்திரசேகர் இயக்கிய ஒன்ஸ்மோர்தான் கடைசியாக அவர் கொடுத்த ஹிட் படம். அதன் பின்னர் அவருக்கு சரிவர படங்கள் அமையவில்லை. அதேசமயம், விஜய் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இன்று இளைய தளபதியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனது வீட்டை ஷோபா சிறப்பாக வாஸ்துமுறைப்படி மாற்றியதைக் கேள்விப்பட்டு பலரும் இப்போது ஷோபாவிடம் வாஸ்து ஆலோசனை கேட்கிறார்களாம். ஷோபாவும் தாராளமாக ஆலோசனை கூறிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் எந்தெந்த துறைகளில் எல்லாம் கலக்கப் போகிறாரோ ஷோபா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X