19 வயதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா.. செமயாக அசத்திய Rhea Singha.. குவியும் வாழ்த்து

ஜெய்ப்பூர்: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவும், நடிகையுமான ஊர்வசி ரவுத்தேலா நடுவராக பங்கேற்றார். இப்போட்டியில் 19 வயதே ஆன Rhea Singha மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு ஊர்வசி முடிசூட்டினார். இதனையடுத்து Singhaவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

உலக அளவில் ஃபேமஸான போட்டிகளில் ஒன்று மிஸ் யுனிவர்ஸ். மிஸ் வேர்ல்டு போட்டிக்கு இணையாக இது கௌரவமாக கருதப்படுகிறது. இதில் வென்றுவிட்டால் இந்த பிரபஞ்சத்திலேயே அழகி என்ற பெயரையும், புகழையும் பெறலாம் என்பதால் இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அழகிகள் அந்தப் போட்டியில் பங்கேற்பார்கள். இந்தியாவை அந்தப் போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்றால் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் வெல்ல வேண்டும் என்பது அவசியம்.

miss universe miss universe india rhea singha

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024: அந்தவகையில் 2024ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. பல அழகிகள் கலந்துகொண்டார்கள். இதனையடுத்து இறுதிப்போட்டியானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் மொத்தம் ஐந்து அழகிகள் கலந்துகொண்டார்கள். இந்தப் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது.

Rhea Singha: இந்த இறுதிப்போட்டியில் நடிகையும், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவுமான ஊர்வசி ரவுத்தேலா நடுவராக பங்கேற்றார். வெறும் அழகை மட்டும் வைத்து தேர்ந்தெடுக்காமல் இறுதிப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அழகிகள் சொல்லும் பதிலை வைத்தும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறார். அந்தவகையில் குஜராத்தை சேர்ந்த 19 வயதே ஆன Rhea Singha மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஊர்வசி ரவுத்தேலா மகுடம் சூட்டினார்.


மகிழ்ச்சியில் Singha:இதனையடுத்து நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் Rhea Singha கலந்துகொள்ளவிருக்கிறார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றது தொடர்பாக பேசிய சிங்கா, “நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த பட்டத்துக்கு தகுதியானவள் என்பதற்காகவும், இந்த நிலைக்கு வருவதற்காகவும் நான் நிறைய வேலைகளை செய்திருக்கிறேன். இதற்கு முன் இந்தப் பட்டத்தை வென்றவர்களிடமிருந்து நான் ரொம்பவே இன்ஸ்பையர் ஆகியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஊர்வசி ரவுத்தேலா: மேலும் ஊர்வசி ரவுத்தேலா பேசுகையில், “இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியா மீண்டும் வெல்லும். மிஸ் யுனிவர்ஸில் கலந்து கொள்பவர்கள் அழகாக இருக்கிறார்கள். முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள்” என்றார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்று மிஸ் யுனிவர்ஸில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவிருக்கும் Rhea Singhaவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X