1947 August 16 Review: கவுதம் கார்த்திக் நடிப்பில் இன்னொரு படமா? '1947 ஆகஸ்ட் 16' விமர்சனம் இதோ !!

சென்னை: (1947 ஆகஸ்ட் 16 ட்விட்டர் விமர்சனம்) : ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் பொன்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த '1947 ஆகஸ்ட் 16' எனும் டைட்டிலில் டைட்டிலுக்கு ஏற்றவாறே வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு படம் இன்று வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுதலை படத்திடம் சரியான அடி வாங்கியது.

 1947 August 16 Twitter Review and Reactions in Tamil

இந்நிலையில், இந்த வாரம் மீண்டும் ஒரு கவுதம் கார்த்திக் படம் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வரும் விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

சுதந்திர போராட்டக் கதை:

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு கிராமத்தில் மட்டும் சுதந்திரம் கிடைத்ததையே ராபர்ட் கிளைவ் எனும் பிரிட்டிஷ்காரர் மறைத்து அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்துவது போன்றும் அதிலிருந்து நாயகன் எப்படி அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருகிறான் என்கிற ரீதியில் மிகவும் வித்தியாசமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 1947 August 16 Twitter Review and Reactions in Tamil

ஏஆர் முருகதாஸ் தயாரிப்பு:

தர்பார் படத்துக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இன்னமும் எந்த படமும் இயக்காமல் இருந்து வரும் நிலையில், அவரது தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் பொன்குமார் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். ரொம்பவே எமோஷனல் படமாக 1947 ஆகஸ்ட் 16 உருவாகி உள்ளது என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

 1947 August 16 Twitter Review and Reactions in Tamil

ஹார்ட்வொர்க்:

மதராசப்பட்டினம் படத்திற்கு பிறகு தமிழில் சுதந்திர போராட்டக் காலக்கட்டத்தை கண் முன்னே கொண்டு வந்த நிறுத்த இந்த படக்குழு ரொம்பவே மெனக்கெட்டுள்ளனர். அவர்களின் உழைப்பை பெரிய திரையில் கண்டு ரசியுங்கள் என நெட்டிசன்கள் பலரும் கவுதம் கார்த்தி படத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

 1947 August 16 Twitter Review and Reactions in Tamil

அண்டர்டேக்கர் நடிச்சிருக்காரா?

1947 படத்தில் பிரிட்டிஷ்கார வில்லனாக நடித்துள்ள நபரை பார்த்த ரசிகர்கள் என்ன இந்த படத்தில் அண்டர்டேக்கர் நடிச்சிருக்காரா? என ரெஸ்லிங் வீரர் அண்டர்டேக்கர் போல அந்த ஹாலிவுட் நடிகர் இருக்கிறார் என கம்பேர் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 1947 August 16 Twitter Review and Reactions in Tamil

பொறுமை
பொறுமையை சோதிக்காதீங்க

போன வாரம் தான் பத்து தல படத்தை பார்த்து ஒரு தலை வலி வந்தது மிச்சம். இந்த வாரமும் மறுபடியும் கவுதம் கார்த்திக் படமா? ஆளவிடுங்க பாஸ் என நெட்டிசன்கள் படம் ரொம்பவே ஸ்லோவாகவும் லாஜிக்கே இல்லாமல் செல்வதாகவும் 1947 படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X